Actor Vijay Ramzan greetings: இஸ்லாமிய உறவுகளுக்கு உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்.
Actor Vijay Ramzan greetings: இஸ்லாமிய உறவுகளுக்கு உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்.
Published on: March 31, 2025 at 2:08 pm
சென்னை மார்ச் 31 2025: புனித ரமலானை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், ” உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ” நோன்பிருந்து உறவுகளுடன் நட்பு நெஞ்சங்களுடனும் பண்பை பரிமாறி… ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை கொண்டாடு, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும்,”இந்நாளில் அனைவரிடமும் அன்பு அமைதி சகோதரத்துவம் நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” எனவும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பிறை தென்பட்டதை தொடர்ந்து 2025 மார்ச் 31, புனித ரமலான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று ( 2025 மார்ச் 31) புனித ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பாக அதிமுக இருக்கும்.. எடப்பாடி பழனிச்சாமி புனித ரமலான் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com