ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி.. யார் இந்த அஸ்வத்தாமன்?

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Published on: April 30, 2026 at 12:32 pm

சென்னை, ஏப்.30, 2026: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த முக்கிய குற்றவாளி அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வழக்கைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், : 2024 ஜூலை 5 அன்று, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி பணியாளர்களாக வேடமிட்ட கும்பல் தாக்கி கொலை செய்தது. இது தமிழ்நாடு முழுக்க பெரும் பதற்றத்தையும்- பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், : மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

நிபந்தனை ஜாமின்

இந்த நிலையில், 2025 நவம்பர் மாதம், சென்னை பிரதான அமர்வு நீதிமன்றம் 12 பேருக்கு, அதில் அஸ்வத்தாமனும் உட்பட, நிபந்தனை ஜாமின் வழங்கியது. அப்போது, தினமும் விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும்; சாட்சிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது. மேலும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

வெளிநாடு தப்ப முயற்சி

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதால், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனத் தெரிகிறது. மேலும், இந்த கைது, வழக்கின் விசாரணை மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ காளிமுத்து மறைவு.. காங்கிரஸ், பொதுமக்கள் அஞ்சலி!

பயங்கரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர் வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது.. பேரறிவாளனுக்கு காங்கிரஸ் எம்.பி எதிர்ப்பு!
Congress MP Sudha

பயங்கரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர் வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது.. பேரறிவாளனுக்கு காங்கிரஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com