இந்தி இங்குதான் திணிக்கப்படுகிறது.. அண்ணாமலை ஷார்ப் அட்டாக்!

National Education Policy: திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் தான் இந்தி திணிக்கப்படுகிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

Published on: March 25, 2025 at 8:15 pm

சென்னை மார்ச் 25 2025 : திமுகவினர் நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் தான் இந்தி திணிக்கப்படுகிறது என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு. அண்ணாமலை.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ( மார்ச் 25 2025) பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான்; மும்மொழி கொள்கைக்கு எங்கு இடமில்லை. இது எங்கள் வழிக் கொள்கை மட்டுமல்ல விழிக்கொள்கையும் இதுதான்” என்றார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ” தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு நடப்பதே திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தான்” என குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை, ” முதலமைச்சர் குடும்பம் உட்பட மற்ற திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன; இந்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதனை மையப்படுத்தி தான் முன்மொழிக் கொள்கை நகர்கிறதே தவிர முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்வது போல் இது இந்தி திணிப்பு அல்ல” என தெரிவித்துள்ளார்.

பி எம் ஸ்ரீ பள்ளிகள்

இதற்கிடையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் இதனை ஏற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ₹40 கோடி ஒதுக்கீடு.. அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை: அமைச்சர் கே என் நேரு!

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!
Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com