Kanyakumari | கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Kanyakumari | கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Published on: November 7, 2024 at 10:39 pm
Kanyakumari | கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ஆண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபி (வயது 50) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருப்புவிசாகம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கிறிஸ்டோபர் சுபி, இசக்கிமுத்து வழக்கறிஞராக இருந்துவந்துள்ளார்.
இதற்காக இசக்கி முத்து, கிறிஸ்டோபருக்கு குறிப்பிட்ட தொகை ஒன்றை அளித்தள்ளார். இந்த நிலையில் கிறிஸ்டோபர் எதிர்தரப்பினரிடம் இணக்கமாக செயல்பட்டதாக கூறி இசக்கிமுத்து கொன்று எரித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர். வழக்கறிஞர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க பாடம் நடத்தியபோது மாரடைப்பு; வகுப்பறையிலே அரசு ஆசிரியர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com