விஜய்யின் படத்தை முந்திய திரிஷா.. பரபரக்கும் கோடம்பாக்கம்!

Karuppu hits ₹300 crore; நடிகை திரிஷா- சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் வசூலில் விஜய்யின் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Published on: May 30, 2026 at 3:33 pm

சென்னை, மே 30, 2026: நடிகர் சூர்யா – த்ரிஷா நடிப்பில் தியேட்டரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ₹300 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த வெற்றிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்; அதில் ஆமிர் கான் நேரடியாக சூர்யாவுக்கு மெசேஜ் அனுப்பி பாராட்டியுள்ளார்.

கருப்பு திரைப்படம், மே 15, 2026 அன்று வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் வெளியான 15 நாள்களில் உலகளவில் ₹300 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான, “வாரிசு” திரைப்படத்தின் மொத்த வசூலான ₹297.55 கோடியை முந்தியுள்ளது.

எனினும், சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற அமரன் (₹333.67 கோடி) வசூலை இன்னும் எட்டவில்லை. இதற்கிடையில், ஆமிர் கான் சூர்யாவுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பி வாழ்த்தினார். மறுபுறம், சிலம்பரசன், ஆர்.ஜே பாலாஜியை அழைத்து பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆர்.ஜே பாலாஜியை அழைத்து “சூப்பர்… சூப்பர்… சூப்பர்” என்று தனது ஸ்டைலில் வாழ்த்தியுள்ளார். இந்தப் படத்தின் கதை, “ஒரு காவல் தெய்வம் மனித வடிவில் வழக்கறிஞராக மாறி, நீதித்துறையில் உள்ள ஊழலை எதிர்த்து போராடுவது” ஆகும்.

இந்தப் படம் சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் பாதி கதை மற்றும் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான், சேகர் கபூர் கூட்டணி.. எகிறும் எதிர்பார்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com