மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான், சேகர் கபூர் கூட்டணி.. எகிறும் எதிர்பார்ப்பு!

A R Rahman : பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

Published on: May 30, 2026 at 2:28 pm

மும்பை, மே 30, 2026: பிரபல இயக்குநர் சேகர் கபூர் மற்றும் இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணைந்து ‘மசூம்: தி நியூ ஜெனரேஷன்’ என்ற புதிய படத்தை உருவாக்க உள்ளனர். 1983ஆம் ஆண்டு வெளியான ‘மசூம்’ படத்தின் கதையை மையத்தை தக்கவைத்துக் கொண்டு, இன்றைய தலைமுறையின் பார்வையில் குடும்பம், அடையாளம், காதல், இடம்பெயர்வு போன்ற கருப்பொருள்களை ஆராயும் படமாக இது உருவாகிறது.

இந்தப் படத்தை சேகர் கபூர் இயக்குகிறார்; ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். இந்தப் படம் குறித்து கபூர் கூறுகையில், “குடும்பம், உறவுகள், அடையாளம் போன்றவை காலத்தோடு மாறியுள்ளன; சினிமாவும் அதற்கேற்ப மாற வேண்டும்” என்றார்.

ரஹ்மான், கபூர் கூட்டணி

ஏ.ஆர் ரஹ்மான், கபூருடன் முன்னதாக எலிசபெத் திகோல்டர் ஏஜ், பாம்பே ட்ரீம்ஸ், ஒய் மியூச்சிக்கல்? போன்ற படைப்புகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். இதற்கிடையில், 1983 படத்தில் நடித்த நசீருதீன் ஷா மற்றும் ஷபானா ஆஸ்மி மீண்டும் இந்த புதிய படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், கூடுதலாக நடிகர் மனோஜ் பாஜ்பாய், நடிகை நித்யா மேனன் மற்றும் கபூரின் மகள் கவேரி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ‘மசூம்’ படம் அமெரிக்க எழுத்தாளர் எரிக் சேகல் எழுதிய ஆண், பெண் மற்றும் குழந்தை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com