Sakshi touches Jayaram’s feet : மகேந்திர சிங் தோனியின் மகள் மலையாள பாடல் கேட்டு தூங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Sakshi touches Jayaram’s feet : மகேந்திர சிங் தோனியின் மகள் மலையாள பாடல் கேட்டு தூங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 30, 2026 at 2:45 pm
சென்னை, மே 30, 2026: சேகர் கபூர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த செய்தியைத் தொடர்ந்து, இப்போது எம்.எஸ்.தோனி மனைவி சாக்க்ஷி, நடிகர் ஜெயராமை சந்தித்த சம்பவம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் போட்டியில் அவர் ஜெயராமை சந்தித்து தன்னை அவரது ரசிகை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஜெயராம் தனது புதிய தமிழ் படம் பரிமளா & கோ விளம்பர நிகழ்ச்சியில் இந்தச் சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ஐ.பி.எல் போட்டியில் திடீரென சாக்க்ஷி வந்து, அவரது கால்களை தொட்டு, “நான் உங்கள் ரசிகை” என்று கூறியதாக அவர் தெரிவித்தார். அப்போது, முதலில் அவர் தன்னை வேறு யாரோடு குழப்பியிருக்கலாம் என ஜெயராம் நினைத்துள்ளார்.
இது குறித்து சாக்ஷி, “எங்களின் மகள் ஜிவா சிறுவயதில், மலையாள பாடலைக் கேட்டு தூங்குவாள். அந்தப் பாடல் “அம்பலப்புழா உன்னிக்கானானோடு” ஆகும். இது, 1991ஆம் ஆண்டு வெளியான அத்வைதம் என்ற படத்தில் ஜெயராம் பாடிய பாடல் ஆகும். தோனி மகளின் பாட்டி ஷீலா, அந்தப் பாடலை அடிக்கடி பாடியதால், ஜிவா அதை விரும்பி கேட்டுள்ளார். இதற்கிடையில், அவர் பாடிய அந்தப் பாடல் வீடியோ 2017இல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப்.. பூஜா சிங் சாதனை.. இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com