ஜோகன்னஸ்பர்க், ஜூலை 13, 2026: தென் ஆப்பிரிக்க கால்பந்து உலகம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடி, தனது அணி முதன்முறையாக நாக்-அவுட் சுற்றை எட்ட உதவிய மிட்ஃபீல்டர் ஜேடன் ஆடம்ஸ் தனது 25-வது வயதில் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள், அணித்துணையர்கள் மற்றும் உலக கால்பந்து சமூகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை கேப் டவுன் நகரின் ஸ்கோட்செக்லூஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆடம்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி வெளியிட்ட அறிக்கையில், ஆடம்ஸின் மறைவை உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவரது இறப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
மமெலோடி சன்டவுன்ஸ் மற்றும் பஃபனா பஃபனா அணிகளுக்காக விளையாடிய ஆடம்ஸ், உலகக் கோப்பையில் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது திறமையான மிட்ஃபீல்ட் ஆட்டம், தென் ஆப்பிரிக்க அணியை வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு எட்டச் செய்தது. இளம் வயதிலேயே அவர் சாதித்த வெற்றிகள், அவரது எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் அந்நாட்டின் அமைச்சர் மெக்கென்சி, “ஜேடன் ஆடம்ஸ் தனது 25-வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த அதிர்ச்சியுடனும் கனத்த இதயத்துடனும் அறிந்துகொண்டேன்” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார். ரசிகர்கள் அவரது மறைவு காரணத்தை அறிய முயற்சி செய்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்க கால்பந்து சமூகம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க :இங்கிலாந்து டி-20 கிரிக்கெட் தொடர்.. தவறு நடந்தது எங்கே? கையை பிசையும் ஷ்ரேயாஸ் ஐயர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்