FIFA World Cup : ஃபிஃபா உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இடம் இல்லை; இருப்பினும், தென்னிந்திய வீரர்கள் 3 பேர் விளையாடுகின்றனர்.
FIFA World Cup : ஃபிஃபா உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இடம் இல்லை; இருப்பினும், தென்னிந்திய வீரர்கள் 3 பேர் விளையாடுகின்றனர்.

Published on: June 5, 2026 at 9:30 pm
சென்னை, ஜுன் 5, 2026: இந்திய அணிக்கு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இடம் இல்லாதபோதிலும், தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளனர். இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெருமையாகும்.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் நிஷான் வேலுப்பிள்ளை, உலகக் கோப்பையில் அறிமுகமாகும் முதல் தமிழ் வம்சாவளி வீரர்களில் ஒருவராகிறார். அவர் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடி, தனது திறமையால் தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல், பிரான்ஸ் அணிக்காக விளையாடும் சாமுவேல் மௌட்டூசாமிவும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் மையப்பகுதி வீரராக விளையாடி, தனது திறமையால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இவரது பங்களிப்பு பிரான்ஸ் அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள வீரர்
கேரள மாநிலம் கண்ணூரைச் பூர்வீகமாகக் கொண்ட 19 வயதான தஹ்சின் முகமது ஜம்ஷித், 26 பேர் கொண்ட கத்தார் அணியில் இடம்பெற்று விளையாடவுள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பையில் விளையாடும் கேரளாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
ஜூன் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில் 12 பிரிவுகளின் கீழ் போட்டியிடும் 48 அணிகளில் இந்தியா இடம்பெறவில்லை என்றாலும், இப்போட்டிக்கான ஆர்வம் மற்றும் உற்சாகம் குறையாமல் உள்ளது.
இதையும் படிங்க : பி.வி. சிந்து vs ஆன் சே-யங்.. சூடு பறக்கும் களம்.. யாருக்கு சாதகம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com