Gambhir Backs ICC Pink Ball Trial : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் போட்டிகளில் பகல் நேரத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தும் விதியை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
Gambhir Backs ICC Pink Ball Trial : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் போட்டிகளில் பகல் நேரத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தும் விதியை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: June 5, 2026 at 9:38 pm
புதுடெல்லி, ஜூன் 5, 2026: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டெஸ்ட் போட்டிகளில் பகல் நேரத்தில் பிங்க் பந்தை பயன்படுத்தும் விதியை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்த முடிவை வரவேற்று, மோசமான வானிலை காரணமாக போட்டி முடிவின்றி நிறுத்தப்படுவதைத் தவிர்க்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் எனக் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் கூட்டத்திற்குப் பிறகு, இரு அணிகளும் முன்கூட்டியே ஒப்புக்கொண்டால், பகல் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பயன்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டி சிவப்பு பந்துடன் தொடங்கும்; ஆனால் ஒளி குறைவாக இருந்தால், விளக்குகள் ஏற்றி பிங்க் பந்தை பயன்படுத்தி, மற்ற ஓவர்களை பூர்த்தி செய்யலாம்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், “ஒரு முடிவை எடுக்க வாய்ப்பு இருந்தால், அதை பயன்படுத்த வேண்டும். குவாஹட்டி, ராஞ்சி போன்ற கிழக்கு இந்திய நகரங்களில் சூரியன் மாலை 4 மணிக்கே மறைகிறது. அப்போது ஓவர்களை இழக்காமல், பிங்க் பந்தை பயன்படுத்துவது நல்ல தீர்வு” என்றார்.
எனினும், அதே நேரத்தில், சிவப்பு பந்திலிருந்து பிங்க் பந்துக்கு மாறுவது வீரர்களுக்கு சிரமமாக இருக்கலாம் என அவர் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க : டி-20 கேப்டன் சூர்ய குமார் கேப்டன்ஷி பறிப்பு.. ஐயோ.. பாவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com