ICC Champions Trophy: கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
ICC Champions Trophy: கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
Published on: March 13, 2025 at 8:49 am
இன்றைய இளைஞர்களுக்கு ஐபிஎல் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்று இருந்தாலும், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. இவர் 2017 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் ஆனார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் இல் பேட்டி ஒன்றில் பேசிய ரிஷப் பண்ட், சிறுவயதில் இருந்தே தனக்கு ஒரு கனவு மட்டுமே இருந்ததாகவும் அது இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் இல் தாம் விளையாடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
இன்று மக்கள் ஐபிஎல்-இல் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இது ஒரு சிறந்த தளம், ஆனால் இளம் கிரிக்கெட் வீரர்களின் இலக்கு உங்கள் நாட்டுக்காக விளையாடுவதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஐபிஎல் உட்பட மற்ற அனைத்தும் சரியாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
ஒரு நாள் நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று எப்போதும் நம்பினேன். கடவுள் கருணையால் 18 வயதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அட்டகாசமான ஆட்டபாணிக்கு பெயர் பெற்றவர் ரிஷப் பண்ட். அவருடைய ட்ரேட் மார்க் ஷாட்டில் ஒரு கையால் சிக்ஸ் அடிப்பதும் அடங்கும். அவர் கைகளில் இருந்து அடிக்கடி பேட் நழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அவர் விளக்கினார்.
நான் என்னுடைய கீழ் கையை மிகவும் லேசாக பிடிப்பதால் இது பெரும்பாலும் நிகழ்கிறது என்று நினைக்கிறேன். முக்கியமாக என் கீழ் கையை சப்போர்ட்டிற்காக மட்டுமே பயன்படுத்த முயற்சிக்கிறேன். ஏனெனில், சில நேரங்களில் அது ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுகிறது. எனவே என் மேல் கையை இறுக்கமாக பிடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க Champions Trophy 2025: விராத் கோலி முதல் ரோகித் வரை.. இந்தியர்களின் ஆட்டம் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com