சதுரங்க விளையாட்டில் சாம்பியன்.. கிரிக்கெட் மீது தீராக் காதல்.. சஹல் குறித்து தாய் சுனிதா!

Yuzi’s Childhood Tales : யுஸ்வேந்திர சஹல் கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டவராக திகழ்ந்துள்ளார்; காலை 5 மணிக்கே கிரிக்கெட் பயிற்சிக்கு மைதானம் சென்றுவிடுவார்.

Published on: May 10, 2026 at 3:15 pm

புதுடெல்லி, மே 10, 2026: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல் தனது சிறுவயதில் மிகவும் குறும்பாக இருந்தாலும், கிரிக்கெட்டிற்கான அவரது அக்கறை மற்றும் உழைப்பை அவரது தாய் சுனிதா சஹல், அன்னையர் தின நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அவர், டி-20 கிரிக்கெட் போட்டியில், 300 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்ததற்கு அவரது தாயின் ஆதரவு மிக முக்கிய காரணம் ஆகும்.

சஹலின் சிறுவயது

மேலும், பேசிய சுனிதா, “யுஸ்வேந்திர சஹல் சிறுவயதில் குறும்புகள் நிறைந்தவனாக இருந்தாலும், காலை 5 மணிக்கே கிரிக்கெட் விளையாட தயாராகி விடுவார். பெரியவர்கள் அழைத்துச் செல்லாவிட்டால் வாய்ப்பு தவறிவிடும் என்பதால், அவர் எப்போதும் முன்கூட்டியே தயாராகி காத்திருப்பார்.
ஆனால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், அவர் மறைந்து விடுவார்; அப்போது அவரது சகோதரிகள் இழுத்து கொண்டு வருவார்கள்” என்றார்.

கிரிக்கெட் பயிற்சி

மேலும், “சஹல் சிறுவயதில் சதுரங்கத்தில் தேசிய அளவிலான வெற்றிகளைப் பெற்றார். 2002-ஆம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சதுரங்க போட்டியில் ஆறு மணி நேரம் தொடர்ந்து சதுரங்கம் விளையாடினார்; எனினும், அவரது உண்மையான ஆர்வம் எப்போதும் கிரிக்கெட்டில்தான் இருந்தது. “சதுரங்கம் விளையாடுவேன், ஆனால் அதற்குப் பதிலாக கிரிக்கெட் விளையாட அனுமதி தர வேண்டும்” என்று கூறுவார்.

குடும்ப வாழ்க்கை

இதையடுத்து, “சஹல் தனது குடும்பத்தினருடன் எப்போதும் அன்பாகவும் கவனமாகவும் இருப்பார். அவரது சகோதரிகளுடன் நேரம் செலவிடுவார், தாயை மதிப்பார். கிரிக்கெட்டில் சாதனை படைத்தாலும், குடும்ப பாசத்தை மறக்காமல் வாழ்கிறார். அவரது உழைப்பும் கவனமும் தான் இன்று வரலாறு படைத்திருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க : ஹனி ட்ராப் அபாயம்.. கேள்வி குறியாகும் ஐ.பி.எல் வீரர்களின் பாதுகாப்பு?



திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com