CM Vijay First Speech : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் நான் தவறு செய்ய மாட்டேன் தவறு செய்யவும் விடமாட்டேன் என்று தெரிவித்தார்.
CM Vijay First Speech : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் நான் தவறு செய்ய மாட்டேன் தவறு செய்யவும் விடமாட்டேன் என்று தெரிவித்தார்.

Published on: May 10, 2026 at 2:33 pm
சென்னை, மே 10 2026: தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் தன்னிடம் வைத்துள்ள நம்பிக்கையை எந்த நிலையிலும் காப்பாற்றுவேன் என்று உறுதியளித்தார். “நான் தவறு செய்ய மாட்டேன்; யாரையும் தவறு செய்யவும் விடமாட்டேன்” என்று தெரிவித்தார்.
தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றும், வறுமையும் பசியும் என்ன என்பதை நன்கு அறிந்தவன். நான் பெரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; உங்களில் ஒருவன், உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி போலவே நான் உணர்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
தனக்காக பல கஷ்டங்களையும் அவமானங்களையும் பொருட்படுத்தாமல் நின்ற மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்த விஜய், “சி. ஜோசப் விஜய் எனும் நான்” என்ற நிலைக்கு தன்னை கொண்டு வந்தது மக்கள் ஆதரவுதான் என்றார்.
தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஆட்சியின் உண்மையான நிதிநிலையை ஆய்வு செய்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். எது சாத்தியமோ அதை நிச்சயம் செய்வேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும் போது எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும்.
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, குடிநீர், சாலை, மருத்துவம், ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்தப்படும். மக்களின் பணத்தில் ஒரு பைசாவையும் தொடமாட்டேன்.மேலும், “நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் தமிழகத்தின் 8 கோடி மக்களும் என் மக்கள் தான்” என்று கூறிய அவர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்காக தனது அரசு உறுதியாக நிற்கும் என்றார்.
கட்சிக்குள் அதிகார மையம் ஒன்று மட்டுமே இருக்கும் என்றும், வெற்றி கிடைத்ததால் தவறான பாதையில் செல்ல நினைப்பவர்கள் அந்த எண்ணத்தை இப்போதே அழித்து விடுங்கள் என விஜய் எச்சரித்தார். கடைசியாக, தமிழக மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், தனது “குட்டி நண்பர்கள்” என அழைத்து சிறுவர்களுக்கும் நன்றி தெரிவித்து, “இது ஒரு புதிய தொடக்கம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க : புதுச்சேரி சிறுமி கடத்தல் கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com