நட்சத்திர வீரரன இந்தியாவின் லக்சயா சென் டென்மார்க் வீரரை நேர்செட்டில் தோற்கடித்தார்.
நட்சத்திர வீரரன இந்தியாவின் லக்சயா சென் டென்மார்க் வீரரை நேர்செட்டில் தோற்கடித்தார்.
Published on: November 21, 2024 at 9:11 pm
China Masters 2024 badminton | சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 ஷென்ஜென் நகரில் நடைபெற்று வருகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட லக்சயா சென், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை 21-6 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மறுபுறம் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டத்தில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாசின் பி.வி. சிந்து சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜியா மின் 16-21 21-17 21-23 என்ற கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தினார். அதிர்ச்சி தோல்வியடைந்த பி.வி. சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஜப்பானின் நட்சுகி நிடாராவிடம் அனுபமா 7-21 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், மாளவிகா 9-21 9-21 என்ற கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கிடம் தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க ‘என் வாழ்வில் பல தோல்விகளை சந்தித்தவன் நான்’: சதம் அடித்த சஞ்சு சாம்சன் உருக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com