Prannoy Exits Arctic Open: பின்லாந்தின் வான்டாவில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
Prannoy Exits Arctic Open: பின்லாந்தின் வான்டாவில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

Published on: October 8, 2026 at 1:47 pm
புதுடெல்லி, அக்.8, 2026: பின்லாந்து நாட்டின் வான்டாவில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் முதல் சுற்றிலேயே வெளியேறினார். ஆசிய விளையாட்டுப் போட்டி அணியில் இடம்பெற்றிருந்த 34 வயதான பிரணாய், 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனிடம் 10-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். நடப்பு சீசனில் பிரணாயின் மோசமான பார்ம் தொடரும் நிலையில், இந்த தோல்வி அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதற்கிடையே, இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவில் கிருஷ்ண பிரசாத் கரகா – பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. 5-ம் நிலை வீரர்களான சீனாவின் ஹீ ஜி டிங் – ரென் சியாங் யூ ஜோடியை எதிர்கொண்ட இந்திய இணை, முதல் செட்டை 10-21 என இழந்தாலும், அடுத்த இரு செட்களில் அபாரமாகத் திரும்பி 21-18, 22-20 என வெற்றி பெற்றது.
மே மாதத்தில் செயின்ட்-டெனிஸ் ரீயூனியன் ஓபன் மற்றும் வி.ஐ மெக்சிகன் இன்டர்நேஷனல் சேலஞ்ச் தொடர்களில் தொடர்ந்து பட்டம் வென்ற கிருஷ்ணா–பிருத்வி ஜோடிக்கு, இந்த வெற்றி அவர்களின் முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் சீனத் தைபேயின் சியு பின் சியானை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதே நேரத்தில் இஷாராணி பருவா, தாய்லாந்தின் முதல் நிலை வீராங்கனை ரட்சனோக் இந்தனானிடம் 10-21, 15-21 என தோல்வியடைந்தார்.
தொடர்ந்து இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, ரௌனக் சவுகான் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும் தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் களமிறங்கினர்.
இதையும் படிங்க : 10 ஆண்டுகள் அற்புதமான கேப்டன்ஷிப்.. ஹர்மன்ப்ரீத்தை பாராட்டிய ஸ்ருமிதி மந்தனா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com