CWG 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 74 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இந்தியா 125 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது.
CWG 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 74 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இந்தியா 125 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது.

Published on: July 24, 2026 at 1:51 pm
கிளாஸ்கோ, ஜூலை 24, 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வண்ணமயமான தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. OVO ஹைட்ரோ அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மன்னர் சார்ல்ஸ் III போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதில் ராணி கமிலா, பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் டொனால்ட் ருகாரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் தொடரில் 74 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய வீரர்கள் அணிவகுப்பு
இந்திய அணிவகுப்புக்கு பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்தி தலைமை தாங்கினார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் விழா பேட்டனை ஏந்தினார். இந்திய வீரர், வீராங்கனைகள் சிறிய தேசியக் கொடிகளை அசைத்தபடி அணிவகுத்து வந்தபோது, கிளாஸ்கோ ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடக்க விழாவுக்கு முன்பே இந்தியா பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன், ‘பை’ (Bye) கிடைத்ததால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார். மொத்தம் ஐந்து வீராங்கனைகள் மட்டுமே போட்டியிட்டதால், மூவர் நேரடியாக கடைசி நான்கு இடங்களுக்குத் தகுதி பெற்றனர்.
லவ்லினா, ஜூலை 31-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் டாஃபாகி (Taafaki)-யை எதிர்கொண்டு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நிர்ணயிக்க உள்ளார். இதேபோல், இந்தியாவின் லான் பவுல்ஸ் அணி முதல் நாளில் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்தது.
இன்று ஆண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தபேஷ்வர்நாத் தாஸ், ஸ்வதிஷ் கே.பி., தபன் மொஹந்தி, யோகேஷ்வர் சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர். பாரா நீச்சல் வீரர் ஆர்.வி.வி.பி.கே. புதிகினா, ஆண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் S13 பிரிவில் பங்கேற்கிறார்.
மேலும், ஸ்ரீஹரி நடராஜ் ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் களமிறங்க உள்ளார். இந்த காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 10 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா பாரா வீரர்கள் உட்பட 125 பேர் கொண்ட அணியை களமிறக்கியுள்ளது. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 61 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், இந்த முறையும் சிறப்பான சாதனை படைக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க : ரோஹித், கோலி நீக்கம் சாத்தியமில்லை.. யாராலும் தொட முடியாது.. ரவிச்சந்திர அஸ்வின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com