Ben Stokes : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தனது பேட்டிங் டெக்னிக்கில் அதிகமாக மாற்றங்கள் செய்து வருவதாக முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
Ben Stokes : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தனது பேட்டிங் டெக்னிக்கில் அதிகமாக மாற்றங்கள் செய்து வருவதாக முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார்.

Published on: May 24, 2026 at 10:27 am
லண்டன், மே 24, 2026: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தனது பேட்டிங் டெக்னிக்கில் அதிகமாக மாற்றங்கள் செய்து வருவதாக முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், துர்ஹாம் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் திரும்பியுள்ளார். இந்நிலையில், அவர் நெட்ஸில் அதிக நேரம் செலவழித்து, பேட்டிங் ஸ்டான்ஸ், கிரீஸ் நிலை, டிரிகர் மூவ்மெண்ட் போன்றவற்றில் அடிக்கடி மாற்றம் செய்து வருகிறார்.
இதற்கிடையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், “அவரது இயல்பான ஆட்டத்தை நம்ப வேண்டும்; அதிக யோசனை ஆபத்தானது” என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் மற்றொரு வீரரான மைக்கேல் அதர்டன், “ஸ்டோக்ஸ் போட்டி அனுபவம் குறைவாக உள்ளது. நெட்ஸில் மட்டுமே பயிற்சி செய்வதால், போட்டி அழுத்தத்தில் ஆட முடியாமல் போகிறது” எனக் கூறியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ் கடந்த காலத்தில் காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நீண்ட இடைவெளி எடுத்தார். பந்துவீச முடியாத நிலையில், அவர் நெட்ஸில் அதிகமாக பேட்டிங் செய்தார்.
இதனால், அவரது இயல்பான ரிதம் பாதிக்கப்பட்டதாக நாசர் ஹுசைன் குறிப்பிட்டார். ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் என்பதால், அவரது பேட்டிங் மிக முக்கியமானது.
இதற்கிடையில், அவரது பந்துவீச்சு மீண்டும் நல்ல நிலையில் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்த நிலையில், போட்டி அனுபவம் இல்லாமல், வெறும் நெட்ஸ் பயிற்சியால் மட்டுமே டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியாது என முன்னாள் வீரர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க : லக்னோ அணிக்கு காரியம் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்.. மீண்டெழுந்த பஞ்சாப்.. ப்ளேஆஃப் வாய்ப்பு எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com