படப்பிடிப்பில் சலார்-2.. கே.ஜி.எஃப்-3 எப்போது? பிரசாந்த் நீல் பதில்!

Salaar‑2 First, KGF‑3 Later: கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு டைரக்டர் பிரசாந்த் நீல் பதிலளித்துள்ளார்.

Published on: May 24, 2026 at 10:10 am

பெங்களூரு, மே 24, 2026: தற்போது ‘சலார் 2’ படத்தில் பிஸியாக இருப்பதால், ‘KGF 3’ படப்பிடிப்பு 2027 ஜூன் மாதம் தொடங்கும் என அப்படத்தின் டைரக்டர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். ‘கே.ஜி.எஃப் 3’ குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் பிரஷாந்த் நீல், “தற்போது ‘சலார் 2’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அது முடிந்தவுடன் ‘கே.ஜி.எஃப் 3’ தொடங்கும்” என கூறியுள்ளார்.

இதனால், ‘கே.ஜி.எஃப் 3’ படப்பிடிப்பு 2027 ஜூன் 11 அன்று தொடங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரஷாந்த் நீல், நடிகர் யஷ் நடிக்கும் ‘கே.ஜி.எஃப் 3’-க்கு முன்னதாக, பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் பிஸியாக உள்ளார். இதனால், ரசிகர்கள் ‘கே.ஜி.எஃப் 3’-க்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் படத்தில், யஷ் மீண்டும் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘கே.ஜி.எஃப் 3’ இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ராமாயண படத்தின் விநியோக உரிமை ரூ.450 கோடி.. இந்திய சினிமாவில் புதிய சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com