சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… ஸ்பாட் புக்கிங்; உடனே செக் பண்ணுங்க!

Sabarimala | சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதி அனுமதிக்குமாறு வலியுறுத்த டிடிபி முடிவு செய்துள்ளது.

Published on: October 13, 2024 at 5:46 pm

Updated on: October 13, 2024 at 5:47 pm

Sabarimala | ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குறைந்த அளவிலான பக்தர்களுக்காவது ஸ்பாட் புக்கிங்கை அனுமதிக்குமாறு அரசை வலியுறுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முடிவு செய்துள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவிலின் மிக முக்கியமான பூஜைகள் நடைபெறும் காலத்தை முன்னிட்டு, கேரள அரசு ஒரு நாளைக்கு 80,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்தது. அதுவும் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகப்படியான கூட்டம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அரசிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இருப்பினும், ஒரு பகுதி பக்தர்களுக்கும், இந்து அமைப்புகள் மற்றும் பந்தளம் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட தரிசனத்திற்கான ஸ்பாட் புக்கிங்கை மறுசீரமைக்கக் கோரியவர்களுக்கு முறையான பதில்கள் போய் சேரவில்லை.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், குறைந்த பட்ச பக்தர்களுக்காவது தினமும் உடனடி தரிசன வசதியை ஏற்படுத்துமாறு அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீசன் முழுவதும் பக்தர்கள் தினமும் 18 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எவ்வாறாயினும், கோயில் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு முடிவுகளுக்கும் கோயிலின் தலைமை அர்ச்சகரான தந்திரி ஒப்புதல் தேவை என்று கூறினார்.

இதையும் படிங்க: மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?
Do you know where Rare statues created by the Nav-Pasana in India are located?

இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com