ஆடி அமாவாசை அன்று சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாய காட்சியை திருவையாறில் கொடுத்தது தெரியுமா?
ஆடி அமாவாசை அன்று சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாய காட்சியை திருவையாறில் கொடுத்தது தெரியுமா?
Published on: November 26, 2024 at 8:42 am
Thiruvaiyaru Mythology | அப்பர் என்ற திருநாவுக்கரசர் யாத்திரையாக பல திருத்தலங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்கிறார். திருக்காலத்திக்கு வந்து காலத்தி அப்பரை தரிசித்த திருநாவுக்கரசருக்கு திருக்கைலம் போய் சிவபெருமானின் திருக்கோளத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.
நடந்தே திருக்கைலாயம் நோக்கி செல்கிறார் அப்பர். தள்ளாடுகின்ற வயதிலும் இரவு பகலும் ஆக கைலாயத்தை நோக்கி நடக்கிறார். நடந்து நடந்து அவரது பாதம் தேய்ந்து போய்விட்ட சமயத்தில் ஊர்ந்து ஊர்ந்து செல்கிறார். ஊர்ந்து செல்ல செல்ல கை, கால், முட்டி எல்லாம் தேய்ந்து போகிறது. மார்பால் ஊர்ந்து செல்கிறார் கரடு முரடான பாதையில் செல்லும் பொழுது தோல் கிழிந்து ரத்தம் வந்த வண்ணம் இருக்கிறது.
இருப்பினும் தளராது எப்படியாவது சிவபெருமானை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் உருண்டு புரண்டு கைலாயத்தை நோக்கி செல்கிறார் அப்பர். இதை கண்ட சிவபெருமான் முனிவர் ரூபத்தில் அப்பர் முன் தோன்றி மானிடரால் கைலாய காட்சியை காண முடியாது எனவே வந்த வழியில் திரும்பி போகுமாறு தெரிவித்தார்.
அதற்கு அப்பர் என் உயிரே போனாலும் பரவாயில்லை சிவபெருமானை தரிசிக்காமல் செல்ல மாட்டேன் என்று கூற அவரது பக்தியை பார்த்து வியந்த சிவபெருமான் நீ வந்து என்ன என்னை தரிசனம் செய்கிறது நானே வந்து உனக்கு தரிசனம் தருகிறேன் என்று முடிவு செய்து முனிவர் வடிவத்தில் இருந்து சிவபெருமானாக மாறி ஓங்கும் நாவிற்கு அரசனே எழுந்திரு இதோ இங்கிருக்கும் பொய்கையில் மூழ்கு என்று சொல்லிவிட்டு மறைந்து செல்கிறார். பொய்கையில் மூழ்கிய அப்பர் எழுந்த இடம் திருவையாறு ஆகும்.
அங்கிருந்த அய்யாறு கோயிலை பார்க்கிறார். திருக்கைலாயக் காட்சியை சிவபெருமான் அப்பருக்கு காட்டுகிறார். பார்வதிதேவியுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்ட அப்பர் திருபதிகங்களை பாடினார். அப்பருடைய பக்தியால் வியந்து போன சிவபெருமான் திருக்கைலாயத்தையே திருவையாறுக்கு கொண்டு வந்தது ஆடி அமாவாசை நாளன்றுதான்.
இதையும் படிங்க ஒருமுறை அணிந்த மாலையை சுத்தம் செய்து மறுமுறை அணியலாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com