Mythology | ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள்.
Mythology | ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள்.
Published on: November 23, 2024 at 10:16 am
Mythology | ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கி, மாலை அணிந்து 48 நாட்கள் மண்டல விரதம் இருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு செல்வர். முதல் முறையாக மாலை அணிந்த பக்தர்களை கன்னி சாமி என்று அழைப்பார்கள். கன்னி சாமிகள் பல வருடங்களாக சபரிமலை யாத்திரை சென்ற அனுபவம் வாய்ந்த குருசாமியிடம் ஆலோசனை பெற்று மாலை அணிய வேண்டும்.
அவரவர் வசதிக்கேற்ற குருவிற்கு நச்சனை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெற வேண்டும். கொடுக்கும் தட்சனை ஒரு ரூபாய் ஆனாலும் ஐயப்பனே கொடுத்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கார்த்திகை முதல் நாள் மாலை அணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதம் இருத்தல் வேண்டும். விரதத்தின் போது மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்கக் கூடாது. திருமணம் ஆனவர்கள் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடக்கூடாது. மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து ஐயப்பன் பாதத்தில் சரணாகதி அடைய வேண்டும். விரத காலங்களில் கருப்பு, நீளம், பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும். காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஐயப்பனை மட்டுமே நினைத்து வழிபட வேண்டும்.
குளித்த பிறகு ஐயப்பனுக்கு பூஜை செய்து வழிபட்ட பிறகே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். விரத காலத்தில் முடி வெட்டி கொள்ளுதல் முகச்சவரம் செய்தல் போன்றவை கூடாது. அவர்கள் உடுத்தும் துணிகளை அவர்களே துவைக்க வேண்டும். காலணிகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்கள் பேசுதல் போன்றவை கூடாது.
துக்க வீடு, தீட்டு வீடுகளுக்கு செல்லக் கூடாது. ரத்த சொந்தங்கள் இறப்பு ஏற்பட்டால் மாலையை கழற்றி விட்டு செல்லலாம். மாலையை ஒருமுறை கழற்றினால் மீண்டும் அடுத்த ஆண்டு தான் மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும். விரத காலத்தில் ஏதேனும் பேச நேர்ந்தாலும் பேசி முடிக்கும் பொழுதும் சுவாமி சரணம் என்று சொல்ல வேண்டும்.
விரத காலத்தில் பாய், தலையணை போன்றவைகளை தவிர்த்து வஸ்திரத்தை மட்டும் விரித்து தூங்க வேண்டும். மாலையை கழட்டிய பின்னர் மாலையை பாலில் போட்டு ஒருநாள் வைத்திருந்த பிறகு, அதை கழுவி சுத்தம் செய்து அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே மாலையை சுத்தம் செய்து எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம்.
இதையும் படிங்க : நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com