Mythology | போரில் அர்ஜுனனை பாசுபத அஸ்திரத்தை பயன்படுத விடாமல் கிருஷ்ணர் தடுத்தது ஏன் தெரியுமா?
Mythology | போரில் அர்ஜுனனை பாசுபத அஸ்திரத்தை பயன்படுத விடாமல் கிருஷ்ணர் தடுத்தது ஏன் தெரியுமா?
Published on: November 2, 2024 at 1:06 pm
Mythology | அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்த பின்னர் பாண்டவர்கள் வனவாசம் புகுந்த நேரம் சிவபெருமானிடம் இருந்து, பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக, அர்ஜுனன் கடும் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க பல விதங்களிலும் இந்திரன் சோதனை செய்தார். கடும் மழை, வெயில், காற்று எனும் பல சோதனைகளை தாண்டியும் ரம்பை, ஊர்வசி முதலான தேவலோக பெண்கள் வந்து இடையூறு செய்த போதும் கலங்கவில்லை.
தவத்தில் தீவிரமாக இருந்தான். தொடர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்யும் போது ஒரு காட்டு பன்றி அவரின் தவம் கலைந்தது. கோபத்துடன் அர்ஜுனன் அந்த காட்டுப் பன்றியை காண்டிபத்தால் தாக்கினார். ஆனால் அதற்கு முன்னர் வேறொரு அம்பு பன்றியின் மீது பாய்ந்தது. அங்கே ஒரு வேடம் நான் தான் முதலில் பன்றியை தாக்கினேன் என்று சொன்னதும் அதை மறுத்த அர்ஜுனன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தின் இறுதியில் வில் வித்தையில் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம் என போட்டியிட்டனர். வேடனின் சாதாரண அம்பு அர்ஜுனனின் கையில் இருந்த ஆயுதத்தை நழுவச் செய்தது. இதை எதிர்பாராத அர்ஜுனர் வேடனுக்கு பணிவாக வணக்கம் செலுத்தினார். அர்ஜுனன் செய்த தவத்தால் வேடனாக உருமாறி வந்த சிவபெருமானிடம் போரில் யாராலும் வெல்ல முடியாத ஆயுதத்தை அர்ஜுனன் கேட்டதும் சிவபெருமான் அவருக்கு சக்தி வாய்ந்த பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.
போரின் போது கர்ணன் மீது அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தை பயன்படுத்தும் போது போர்க்களமே இருள் சூழ்ந்தது வானம் எல்லாம் மின்னல்கள் பூமியை அதிரசெய்து வீரர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. பாசுபத அஸ்திரத்தால் போர் மட்டும் முடியாது உலகமே அழிந்து போகும் என்பதை அறிந்த கிருஷ்ணர் போரில் அர்ஜுனனை பாசுபத அஸ்திரத்தை பயன்படுத விடாமல் தடுத்து நிறுத்தினார்.
இதையும் படிங்க : நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com