Mythology | ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் பாதுகாக்கப்படும் ராமானுஜரின் உடல் பற்றி தெரியுமா?
Mythology | ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் பாதுகாக்கப்படும் ராமானுஜரின் உடல் பற்றி தெரியுமா?
Published on: November 16, 2024 at 8:25 am
Mythology | ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜர் மூலவர் ராமானுஜரின் திருமேனியே. ராமாஜர் தன்னுடைய 120 ஆவது வயதில் ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருடைய திருமேனி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கராஜர் வசந்த மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராமானுஜரின் திருமேனி தானான திருமேனி என்று அழைக்கப்படுகிறது. இவரது திருமேனி அமர்ந்த நிலையிலேயே சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது திருமேனிக்கு திருமஞ்சனம் எதுவுமே செய்வது இல்லை. ஆனால் வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரத்துடன் குங்குமத்தை கலந்து அந்த கலவையை அவரது உடலுக்கு பூசி பாதுகாக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகியும் அவரது திருமேனி இன்னும் அப்படியே இருப்பது மிகவும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை நெறிப்படுத்திய பெருமை ராமானுஜருக்கு சேரும். பல வருடங்களுக்கு முன்பு வைணவ துறவிகளின் உடலினை எரிப்பது கிடையாது மாறாக திருப்பள்ளி செய்வர். அதுபோன்று தான் ராமானுஜரின் உடலையும் திருப்பள்ளி செய்துள்ளனர். இன்றளவும் ராமானுஜரின் உடலில் கண்கள் திறந்து இருப்பதையும் கைகளில் நகங்கள் இருப்பதையும் தலை முடியையும் பார்க்க முடிகிறது. ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் உடல் இன்றளவும் அப்படியே இருப்பதை பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது.
இதையும் படிங்க : அயோத்தியை ஆண்ட ராமனின் காலணி; யார் கொடுத்தது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com