Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?
Mythology: 12ஆம் நூற்றாண்டில் சிற்பிகளால் உண்டாக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தெரியுமா?
Published on: April 19, 2025 at 12:38 pm
தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் சோழர்களால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவில் சிற்பக் கலைக்கு பெயர் பெற்றது. இது அழியாத கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தாராசுரம் கோவிலின் நுழைவாயிலில் சப்த சுரங்கள் எழுப்பக்கூடிய இசை படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஒற்றைக் கல்லில் செய்யப்பட்ட நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள ராஜகம்பீரன் மண்டபம் சிற்பக்கலை கூடமாகவே காட்சியளிக்கிறது. கிரானைட்டால் செய்யப்பட்ட ஜன்னல்கள் மற்றும் ரிஷப குஞ்சரம் என்று சொல்லப்படும் ஒரே தலையைக் கொண்ட யானை மற்றும் மாடுடன் கூடிய ஆப்டிகல் இல்யூஷன் போன்ற வடிவமைப்பு சிற்பக்கலையின் உச்சம்.
இதையும் படிங்க : அயோத்தியை ஆண்ட ராமனின் காலணி; யார் கொடுத்தது தெரியுமா?
இந்தக் கோவிலில் மொத்தம் 48 ஆயிரம் சிற்பங்கள் உள்ளன. கோவிலின் மூலவரான சிவபெருமான் ஐராவதீஸ்வரராக காட்சியளிக்கிறார். கோவிலின் ஸ்தலபுறம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை. இது துர்வாச முனிவரின் சாபத்தால் கருமை நிறமாக மாறியது. யானை சாபத்திலிருந்து விமோசனம் பெற இந்த கோவிலை வழிபட்டது. இதனால் யானைக்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைத்தது. ஆகையால் இங்குள்ள சிவபெருமானுக்கு ஐராவதேசுவரர் என்ற பெயர் வந்தது.
இதையும் படிங்க : ஆயிரம் ஆண்டு அதிசயம்; ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் உடல்: எங்குள்ளது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com