Mythology | சபரிமலையில் உள்ள 18 படிகளின் மகத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்.
Mythology | சபரிமலையில் உள்ள 18 படிகளின் மகத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்.
Published on: November 28, 2024 at 11:53 am
Updated on: November 29, 2024 at 12:43 pm
Sabarimala 18 steps Greatness | எந்த கோவிலிலும் படிகளுக்கோ, கட்டிடங்களுக்கோ பூஜை செய்வது இல்லை. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. சபரிமலையில் உள்ள 18 படிகளும் ஆன்மீக சக்தி கொண்ட பகுதி முழுமையான பிராணன் கொண்ட பகுதி. எனவேதான் இந்த 18 படிகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளில் தலையில் உள்ள சக்தி மையத்தை இயக்கி நோய்களுக்கான சிகிச்சை அளிப்பார்கள்.
முன்காலத்தில் அதிகமான எடை கொண்ட பொருட்களை தலையில் தூக்கிச் செல்வது வழக்கம் அதாவது குடம், காய்கறி மூடைகள் போன்றவைகளை தலையில் சுமப்பது உண்டு. பெரியவர்கள் குழந்தைகளை கூட தலையில் சுமப்பர். இந்த காலத்தில் இது போன்ற வேலைகள் இல்லாததால் கபாலத்தில் உள்ள சக்தி மையங்கள் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.
ஆனால் சபரிமலையில் இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்த வண்ணம் பிராணன் செயல்படும் நிலையில் 18 படிகளையும் ஏரி கடக்கும் பொழுது உடலில் சக்தி மாற்றம் ஏற்படும். அதனால்தான் படிகளை ஏறி கடப்பதை நியதி ஆக்கினார் ஐயப்பர். இருமுடி கட்டாமல் சுவாமி ஐயப்பரை கூட தரிசனை செய்து விடலாம் ஆனால் இருமுடி கட்டாமல் 18 படிகளை தொட கூட முடியாது.
இதையும் படிங்க : உலகின் உயரமான மலை; கடுங்குளிர்: ஆதி சங்கரர் கண்டுபிடித்த சிவலிங்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com