Mythology | அர்ஜுனன் கூடவே கிருஷ்ணர் இருக்க காரணம் என்ன தெரியுமா?
Mythology | அர்ஜுனன் கூடவே கிருஷ்ணர் இருக்க காரணம் என்ன தெரியுமா?
Published on: November 13, 2024 at 9:43 am
Mythology | அர்ஜுனனும் கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார் அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா அது புறா தானே என்று கேட்டார். ஆமாம் கிருஷ்ணா அது புறா தான் என்றான் அர்ஜுனன். சில வினாடிகளுக்கு பிறகு அர்ஜுனா எனக்கு என்னவோ அந்த பறவை பருந்தை போல் தெரிகிறது என்றார் கிருஷ்ணர்.
அடுத்த வினாடியே ஆமாம்! ஆமாம்! அது பருந்து தான் என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல் தாங்கள் சொல்வது சரிதான் அது கிளி தான் என பதிலளித்தான் அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் அர்ஜுனா முதலில் சொன்னது எல்லாம் தவறு. இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
அது ஒரு காகம் என்று சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர். நிஜம் தான் கிருஷ்ணா. அது காகமே தான்…சந்தேகமே இல்லை என்று பதிலளித்தான் அர்ஜுனன். என்ன நீ, நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே! உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா? கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
கிருஷ்ணா என் கண்ணை விடவும், அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச் சொன்னால், அது பருந்தோ,காகமோ, புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?” அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கை தான் கிருஷ்ணரை எப்பொழுதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.
இதையும் படிங்க : இந்திரஜித் பெற்ற வரம்; 14 ஆண்டுகள் விழித்திருந்த லட்சுமணன்: ராமயாணத்தில் இந்த விஷயம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com