Health | உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் சளி பிடிக்கலாம்.
Health | உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் சளி பிடிக்கலாம்.
Published on: November 13, 2024 at 9:18 am
Health | பெதுவாக குளிர்காலத்தில் அனைவருக்கும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் குளிர் குறைவாக இருந்தாலும், சிலர் அதிகமாக குளிர்வது போல் உணர்வார்கள். இவ்வாறு நீங்கள் மற்றவர்களை விட குளிர்ச்சியாக உணர்ந்தால், உங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். வைட்டமின் குறைபாட்டின் காரணமாக, நீங்கள் எப்போதும் குளிர்ச்சியாக உணரலாம்.
மேலும் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் சளி பிடிக்கலாம். வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாட்டால் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. இந்த வைட்டமின் குறைபாடு இரத்த சோகை ஏற்படுவதற் கானகாரணமாக உள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு அடிக்கடி சளியை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்
வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, நீங்கள் அடிக்கடி சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணரலாம். குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு உங்கள் நரம்பு மண்டலத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
குளிர்காலத்தில் சூடாக இருப்பது எப்படி?
அடுக்கு ஆடை அணிதல்
ஒரு பெரிய ஆடையை அணிவதை விட பல மெல்லிய ஆடையை அணிவது உடல் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். கம்பளி அல்லது வெப்ப உள்ளாடைகயை தேர்ந்தெடுக்கவும்.
பொருத்தமான தொப்பி அணிதல்
வெளியில் செல்லும் போது, காதுகள், கையுறைகள் மற்றும் காலணிகள் அல்லது பூட்ஸ் மற்றும் தொப்பியை அணியலாம்.
சுறுசுறுப்பாக இருத்தல்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும். சிறு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.
சூடான பொருட்களை உண்ணுதல்
சூடான தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்துதல் சிறந்தது. சூடான பொருட்களை உண்ண மற்றும் குடிக்க வேண்டும். சத்தான, சீரான உணவு மற்றும் சூடான தேநீர் அல்லது தண்ணீர் போன்ற சூடான பானங்களை உட்கொள்ளவும்.
தியானம் செய்தல்
தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
(Disclaimer | இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக, எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவரை அணுகவும்)
இதையும் படிங்க : ஆஸ்துமா பிரச்னையா? இந்த 5 உணவுகளை மறக்காதீங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com