Mythology | சிவபெருமானிடம் பாஸ்மாசுரன் பெற்ற வரம் தெரியுமா?
Mythology | சிவபெருமானிடம் பாஸ்மாசுரன் பெற்ற வரம் தெரியுமா?
Published on: October 23, 2024 at 6:15 am
Mythology | இமயமலையில் பாஸ்மாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தால் சிவபெருமான் எந்த வரம் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடியவர் என்பதை நன்கு அறிந்திருந்தான். எனவே அவன் சிவபெருமானை மகிழ்விக்க பல ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தான். அவனது பக்தியால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவன் விருப்பத்தை கேட்கிறார்.
உடனே பாஸ்மாசுரன் சிவபெருமானிடம் ஆண்டவரே நான் என் வலது கையால் எதைத் தொட்டாலும் உடனே சாம்பலாகிவிடும் வரம் கொடுங்கள் என்று கேட்டான். பாஸ்மாசுரனின் தீய எண்ணத்தை உணராத சிவபெருமான் கேட்ட வரத்தை கொடுக்கிறார். வரத்தைப் பெற்ற பாஸ்மாசுரன் சிவனை சாம்பலாக்கி உச்ச சக்தியை பெற வரத்தினை சிவன் மீது சோதனை செய்ய துணிந்தான்.
பாஸ்மாசுரன் சிவனை துரத்தியதை கண்ட விஷ்ணு மோகினி என்ற ஒரு அழகிய பெண்ணாக மாறி பாஸ்மாசுரன் முன் தோன்றினார். அவளது வசீகரிக்கும் அழகு அவனை அவளிடம் விழ வைக்கிறது. அழகிய பெண்ணை கண்ட பாஸ்மாசுரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மோகனிடம் கேட்கிறார். மோகினி தன்னைப்போல் நடனமாடி தோற்கடிக்க முடிந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறாள்.
இதற்கு ஒப்புக்கொண்ட பாஸ்மாசுரன் மோகினி நடனத்தை பார்த்து அதேபோல் நடனம் ஆட துவங்கினான். பாஸ்மாசுரன் தன்னம்பிக்கை அதிகரித்தது. தன்னை மறந்து நடனத்தில் மூழ்கினான் பாஸ்மாசுரன். அப்போது மோகினி தன் வலது கையை தலையில் வைத்து நடனம் ஆடினாள். அந்த அசுரனும் தான் பெற்ற வரத்தினை மறந்து வலது கையை தன் தலையில் வைத்தான். உடனே பொசுங்கி சாம்பல் ஆனான்.
இதையும் படிங்க : ‘தங்கமாய் மாறிய உளுந்து’: திருச்செந்தூர் சிவன் கோவில் வரலாறு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com