விஜயை கட்டிப் பிடிக்க வேண்டும்.. நடுரோட்டில் இளம்பெண் தர்ணா!

Woman’s Viral Plea to Meet Vijay: டெல்லி ஜந்தர் மந்தர் அருகே சாலையில் பெண் ஒருவர் படுத்துக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என வித்தியாசமான கோரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published on: October 3, 2026 at 3:12 pm

புதுடெல்லி, அக்.3, 2026: டெல்லி ஜந்தர் மந்தர் அருகே சாலையில் பெண் ஒருவர் படுத்துக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என வித்தியாசமான கோரிக்கை விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 29ஆம் தேதி பதிவானதாக கூறப்படும் வீடியோவில், சாலையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் பின்னர் படுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல மறுப்பது பதிவாகியுள்ளது.

அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த இரண்டு பெண் போலீசார் முயன்றனர். அப்போது, தன்னைத் தொட வேண்டாம் என்றும், விஜயை சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயை சந்திப்பதே தனது கடைசி ஆசை என்றும் அந்தப் பெண் கூறியதாக வைரலான வீடியோவை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாலையில் படுத்திருந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர், அவர் ஏன் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தார் என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிலர் அந்தப் பெண்ணின் செயலை விமர்சித்தும், சிலர் நகைச்சுவையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த வீடியோவில் விஜய் அந்த இடத்திற்கு வந்ததாகவோ, அந்தப் பெண்ணை சந்தித்ததாகவோ எந்த தகவலும் இல்லை. சம்பவம் தொடர்பான பின்னணி மற்றும் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com