Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
Published on: April 16, 2025 at 3:21 pm
ராய்ப்பூர், ஏப்.16 2025: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு தீவிர மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் புதன்கிழமை (ஏப்.16 2025) தெரிவித்தனர். இவர்கள், ₹13 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டு வந்த தீவிர மாவோயிஸ்டுகள் ஆவார்கள்.
இது குறித்து, பஸ்தார் ரேஞ்ச் காவல் துறைத் தலைவர் சுந்தர்ராஜ், “செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15, 2025) மாலை கோண்டகான் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள கிலாம்-பர்கம் கிராமங்களின் காட்டில், நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க : குருகிராம் நிலம் விற்பனை.. சோனியா காந்தி மருமகனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்!
அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்” என்றார். இந்த நிலையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள், மாவோயிஸ்டுகளின் கிழக்கு பஸ்தார் பிரிவின் உறுப்பினரும், மாவோயிஸ்ட் தளபதியுமான ஹல்தார் மற்றும் பகுதி குழு உறுப்பினர் ராமே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில், ஹல்தார் மற்றும் ராமே ஆகியோரின் தலைக்கு முறையே ₹8 லட்சம் மற்றும் ₹5 லட்சம் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனை அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். சமீபத்திய நடவடிக்கையின் மூலம், இந்த ஆண்டு இதுவரை மாநிலத்தில் தனித்தனி மோதல்களில் 140 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை .. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com