Dr Ramadoss: 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Dr Ramadoss: 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: May 27, 2026 at 3:18 pm
Updated on: May 27, 2026 at 3:19 pm
சென்னை, மே 27, 2026 : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு சாதாரண அரசியல் திட்டமல்ல; அது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். இந்த இடஒதுக்கீடு முறையை எந்த காரணத்திற்காகவும் பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மொத்த மக்கள் தொகை 85 முதல் 90 சதவீதம் வரை இருப்பதாக பல்வேறு ஆணையங்கள் மற்றும் சமூக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காகவே 69% இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டு சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று சுட்டிக் காட்டியுள்ள மருத்துவர் ராமதாஸ், “இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த கணக்கிடத்தக்க தரவுகள், சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூகநீதிக்கும் இணையானவை ஆகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com