Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் உட்பட நான்கு பேர் மரணம் அடைந்தனர்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் உட்பட நான்கு பேர் மரணம் அடைந்தனர்.
Published on: October 24, 2024 at 11:38 pm
Updated on: October 24, 2024 at 11:41 pm
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் புட்ட பத்திரி என்ற பகுதியில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் மற்றும் இரண்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் தரப்பிலும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. இதனை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள், கட்டட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தக் கொடூரமான தாக்குதலில், உள்ளூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில் மீண்டும், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த ஒரு சில வாரங்களிலே பயங்கரவாத தாக்குதல்கள் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி; நவ. 11 இல் பதவி ஏற்கிறார் சஞ்சீவ் கண்ணா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com