மேகதாது அணை விவகாரம்.. 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் தமிழ்நாடு.. டி.கே சிவக்குமார் விமர்சனம்!

Shivakumar on Mekedatu: தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.

Published on: June 4, 2026 at 5:31 pm

Updated on: June 4, 2026 at 6:03 pm

பெங்களூரு, ஜூன் 4, 2026: கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கடந்த 30–40 ஆண்டுகளாக அவர்கள் மேகதாது திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.

மேலும், “காவிரி கமிஷன் மற்றும் மத்திய அரசு எங்களது கோரிக்கையை பெற்றுள்ளனர். அதை அவர்கள் ஆய்வு செய்வார்கள். இப்போது இந்த விவகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது” என்றும் விளக்கினார்.
தொடர்ந்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் எந்தக் கட்சிகள் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து அரசியல் செய்வார்கள் எனவும், அதனால் இந்த விவகாரம் அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

மேகதாது அணை தொடர்பான திட்டம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. நீர்வழங்கல் மற்றும் காவிரி ஆற்றின் பயன்பாடு குறித்து இரு மாநிலங்களும் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க : 21 பேரின் உயிரை குடித்த ஹோட்டல் தீ விபத்து.. பாதுகாப்பு குறைபாடு- என்னதான் நடந்தது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com