மு.க ஸ்டாலின் நல்லாட்சி.. கூட்டணி கட்சிகளின் ஆதரவு.. செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு!

Senthil Balaji: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன்” என்றார் செந்தில் பாலாஜி.

Published on: June 4, 2026 at 5:44 pm

கோயம்புத்தூர், ஜூன் 4, 2026: கோயம்புத்தூரில் திமுக எம்.எல்.ஏ வி. செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் நல்லாசியுடன், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன். நமது கூட்டணிக் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அளித்த ஆதரவுடன், இத்தெற்குத் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், “இன்றிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகப் பணிகளுக்காகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் தெற்குத் தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்களைப் பெற்று, அவற்றுக்குத் தீர்வு காணும் ஒரு அலுவலகமாகச் செயல்படுகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி மக்களுக்கு நேரடியாக எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் மனுக்களைப் பெற்று, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

திமுகவின் இந்த முயற்சி, மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டி? அப்பாவு விருப்பம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com