Rahul gandhi vs kangana ranaut | விவசாய சட்டங்கள் தொடர்பான கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பிரதம் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

February 17, 2025
Rahul gandhi vs kangana ranaut | விவசாய சட்டங்கள் தொடர்பான கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பிரதம் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Published on: September 25, 2024 at 9:45 pm
Rahul gandhi vs kangana ranaut | கங்கனா ரணாவத், விவசாய சட்டங்கள் திரும்ப வர வேண்டும். இதனால், விவசாயிகளின் வருமானம் உயரும். இந்தச் சட்டங்களுக்கு சில மாநிலங்களில் மட்டும்தான் எதிர்ப்பு இருந்தது. இது எனது தனிப்பட்ட கருத்து” எனக் கூறி இருந்தார்.
இந்தக் கருத்துகள் சர்ச்சையான நிலையில் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். அதில், யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசவில்லை. எனது தனிப்பட்ட கருத்துக்களை நான் தெரிவித்து இருந்தேன். இது பாரதிய ஜனதா கட்சியின் கருத்துகள் அல்ல” என்றார்.
Do listen to this, I stand with my party regarding Farmers Law. Jai Hind 🇮🇳 pic.twitter.com/wMcc88nlK2
— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2024
இந்த நிலையில் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விவசாய சட்டங்கள் தொடர்பான கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி, “அரசாங்கத்தின் கொள்கையை தீர்மானிப்பது யார்? பாஜக எம்பியா அல்லது பிரதமர் மோடியா?” 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள், குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் தியாகம் செய்த பிறகும், பாஜகவினர் திருப்தியடையவில்லை.
सरकार की नीति कौन तय कर रहा है? एक भाजपा सांसद या प्रधानमंत्री मोदी?
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2024
700 से ज़्यादा किसानों, खास कर हरियाणा और पंजाब के किसानों की शहादत ले कर भी भाजपा वालों का मन नहीं भरा।
INDIA हमारे अन्नदाताओं के विरुद्ध भाजपा का कोई भी षडयंत्र कामयाब नहीं होने देगा – अगर किसानों को नुकसान… pic.twitter.com/ekmHQq6y5D
விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் எந்த சதியையும் வெற்றி பெற இந்தியா கூட்டணி அனுமதிக்காது. விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்தால். மோடி ஜி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் கங்கனா ரணாவத்தின் பேச்சு அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் விவசாய சட்டங்கள்.. வாய்விட்ட கங்கனா: பகிரங்க மன்னிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com