Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (செப்.26, 2024) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

February 17, 2025
Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (செப்.26, 2024) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
Published on: September 25, 2024 at 9:27 pm
Senthil Balaji | சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
தி.மு.க. அரசின் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி ஜாமின் கோரி பலமுறை விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு இதுவரை ஜாமின் வழங்கப்படவில்லை. அவரின் ஜாமின் 40க்கும் மேற்பட்ட முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தமிழக அரசில் இரு துறைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர் சிறையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அவரது வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்படும்பட்சத்தில் அவர் வகித்த இரு துறைகளில் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com