சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

February 17, 2025
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Published on: September 25, 2024 at 5:06 pm
Updated on: September 25, 2024 at 10:39 pm
Savukku Shankar | சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் இன்று (செப்.25, 2024) விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “கோவை சிறையில் எனது கை உடைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க காவலர்கள் வாகனத்தில் அலைகழிக்கப்பட்டேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன்னை எப்போதும் பத்திரிகையாளர் என பெருமையாக பேசினார்.
ஆனால், மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளர்களை முடக்குகிறார். கருணாநிதி கையெழுத்து பிரதியெல்லாம் நடத்தினார். முரசொலி பத்திரிகையை வீதி வீதியாக கொண்டு சென்றார். மேலும் கருணாநிதி விமர்சனங்களை மதிப்பார். ஆனால், மு.க. ஸ்டாலினால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து, யூ-ட்யூப் பத்திரிகையாளர் வாராகி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றங்கள் என்ன? அவரின் கைது தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்றார். முன்னதாக தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற சவுக்கு சங்கர், தனது தாயாரின் பென்ஷன் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சவுக்கு மீடியா அடுத்த 3 மாதங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கும். எனது ஊடக நிறுவனத்தை வேண்டும் என்றே முடக்கினர். இதில் வேலை செய்தவர்கள் பணி இல்லாமல் அவதியுறுகிறார்கள்” என்றார். இதற்கிடையில், “தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசினால் தன்னை விடுவிப்பதாகவும் கூறினார்கள் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சவுக்கு சங்கர், “விரைவில் தாம் ஒவ்வொரு மீடியாவையும் சந்தித்து பேசுவேன்” என்றார். மேலும் தாம் கடந்த காலத்தைப் போல் வீரியத்துடன் செயல்படுவேன்” என்றும் கூறினார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com