Jammu and Kashmir | Rahul Gandhi | ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
Jammu and Kashmir | Rahul Gandhi | ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
Published on: September 18, 2024 at 9:34 pm
Jammu and Kashmir | Rahul Gandhi | ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்.19, 2024) நடைபெற்றது. இந்த நிலையில் ராகுல் காந்தி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜம்மு மற்றும் காஷ்மீர் சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் அனைத்து அரசியலமைப்புச் உரிமைகளை மீறும் ஒரு நடவடிக்கையாகும். இந்தியா கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்யும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்க, பெண்களை வலிமையாக்க, அநீதியின் சகாப்தத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவர உதவும். மேலும், ஜம்மு-காஷ்மீரை மீண்டும் செழிப்பாக்கும்” எனத் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில், முதன்முறையாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. யூனியன் பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல’: மாயாவதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com