Priyanka Gandhi | ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Priyanka Gandhi | ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Published on: October 23, 2024 at 2:52 pm
Priyanka Gandhi | காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா புதன்கிழமை (அக். 23, 2024) வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, பிரியங்கா காந்தி வத்ரா உடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களும் உடன் இருந்தனர்.
முன்னதாக, வயநாட்டில் காலை 11:45 மணியளவில் கல்பெட்டாவில் இருந்து ஒரு பெரிய ரோட்ஷோவில் கலந்துகொண்டார்.
ரோட்ஷோவின் போது அவருடன் அவரது சகோதரர் ராகுல் காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, அவர்களது குழந்தைகள் மற்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
LIVE: Nomination | Road Show | Wayanad | Kerala.https://t.co/Wg7X54tdAh
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 23, 2024
சாலைப் பேரணிக்குப் பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “1989 ஆம் ஆண்டு தனது 17வது வயதில் தனது தந்தை ராஜீவ் காந்திக்கு ஆதரவாக வாக்களிக்ககோரி அரசியல் பிரச்சாரங்களில் பங்கேற்கத் தொடங்கினேன்.
வயநாடு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தி, வயநாடு மக்களே “என் சகோதரி பிரியங்காவுக்கு வாக்களித்து பார்லிமெண்டிற்கு அனுப்புங்கள்” என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்கே, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் வயநாடுக்கு வரவில்லை. பிரியங்கா காந்தியை ஆசீர்வதியுங்கள்” என்றார்.
இதையும் படிங்க வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டி: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com