Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ‘போர் நடவடிக்கை’ என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ‘போர் நடவடிக்கை’ என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 24, 2025 at 6:11 pm
Updated on: April 24, 2025 at 6:21 pm
இஸ்லாமாபாத், ஏப்.24 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக, 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் வியாழக்கிழமை (ஏப்.25 2025) நிராகரித்தது.
இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் பதிலை வகுக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது 240 மில்லியன் பாகிஸ்தானியர்களின் உயிர்நாடியை தடுக்கும் என்று பாகிஸ்தான் கூறியது.
மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மைக்கும் அதன் மக்களின் பாதுகாப்பிற்கும் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் அனைத்து களங்களிலும் உறுதியான பரஸ்பர நடவடிக்கைகளால் எதிர்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பாகிஸ்தான் உடனடியாக வாகா எல்லைச் சாவடியை மூடும். இந்த பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்படும்.
செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் கடந்து சென்றவர்கள் உடனடியாக அந்தப் பாதை வழியாகத் திரும்பலாம், ஆனால் 2025 ஏப்ரல் 30 க்குப் பிறகு அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், போருக்கான அழைப்பு என்றும் பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க : குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com