ஜம்மு காஷ்மீரில் மகா கூட்டணி? வாய்விட்ட மெகபூபா: பா.ஜ.க.வுக்கு பலமான செக்!

ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மெகபூபா முஃப்தி நிராகரித்தார்.

Published on: August 24, 2024 at 5:38 pm

Updated on: August 24, 2024 at 5:46 pm

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க தயார் என மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, “எங்களது நிகழ்ச்சி நிரலை ஏற்கத் தயாராக இருந்தால், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் விட்டுக்கொடுப்போம்” என்று சனிக்கிழமை (ஆக.24) தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மெகபூபா முஃப்தி, “எங்கள் நிகழ்ச்சி நிரலை ஏற்கத் தயாராக இருந்தால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை மறந்து விடுங்கள். காங்கிரஸும், தேசிய மாநாட்டு கட்சியும் (NC) காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம்; தொகுதிகளை நாங்கள் வழங்கி உங்களை பின்தொடர்வோம்” என்றார்.

தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மெகபூபா முஃப்தி நிராகரித்தார். கடந்த காலத்தில் மெகபூபா முப்தி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல் அமைச்சர் பொறுப்பேற்றார்.
ஜம்மு காஷ்மீரில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

பி.டி.பி தனது தேர்தல் அறிக்கையில் ஜம்மு மற்றும் காஷ்மீரை அதன் முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் தொடர https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com