தமிழக அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.24) நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் புத்தகம் தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “லால் சலாம் பட ஷூட்டிங்கின் போது திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்போது எ.வ. வேலு அவர்களின் கல்லூரில் தங்கி இருந்தேன். அங்கு எனக்கு சிறப்பான அரவணைப்பு கிடைத்தது. அவருக்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். நல்ல வேளை, கைமாறாக இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்காக எ.வ வேலு என்னை சந்தித்த போது நீண்ட நாள்களுக்கு முன்பு எழுதிய புத்தகம் என்றார். இந்தப் புத்தகம் குறித்த தகவலை கருணாநிதியிடம் கூறியபோது அவர் திட்டியுள்ளார். மேலும் இந்தத் தலைப்பு கூட கருணாநிதி வைத்ததுதான் என்பதையும் எ.வ வேலு கூறினார் என்றார். மேலும் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகள் வேறு யாராவது சந்தித்து இருந்தால் காணாமல் போயிருப்பார்கள்” என்றார். தொடர்ந்து, துரைமுருகன் குறித்தும் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு குறித்தும் கலகலப்பாக பேசினார். மேலும் மு.க. ஸ்டாலினுக்கு ஹட்ஸ்ஆஃப் என்றார் ரஜினிகாந்த். வாட்ஸ்அப்பில் தொடர https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h