குப்பை கொட்ட சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு: இளைஞருக்கு மரண தண்டனை

POCSO Act | 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: September 27, 2024 at 9:38 am

POCSO Act | குப்பை கொட்ட சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இளைஞருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்ப வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிப்பூரில் 2023 மார்ச் 26ஆம் தேதி நடந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி குப்பை போட சென்ற இடத்தில் மாயமானார். இந்தச் சம்பவம் போலீஸூக்கு தெரியவந்ததும் அவர்கள் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அன்றைய தினமே சிறுமி அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் உள்ள சாக்குப் பையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை அசோக் ஷா என்ற இளைஞர் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிப்தோ படடாச்சார்யா, “இது அரிதான வழக்குகளில் ஒன்று. சிறுமிக்கு கொடுமை நடந்திருக்கும் சமயத்தில் அவரால் தப்பிக்க முடியாமல் அவதியுற்றி இருப்பார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்” என்றார்.

இந்த வழக்கில், ஜூன் 16, 2023 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஓராண்டுக்குள் விசாரணை முடிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி தனது உத்தரவில், மேற்கு வங்க அரசு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு, மாநிலத்தின் பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : நாகப்பட்டினம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: மனநல ஆலோசகர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com