Aadi Thabasu: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
Aadi Thabasu: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Published on: July 18, 2026 at 7:47 pm
சங்கரன்கோவில், ஜூலை 18 2026: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவிலின் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடைபெறும். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் புனிதக் கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடக்கி வைக்கப்பட்டது.
திருவிழாவின் முதல் நாளில் சங்கர நாராயணசுவாமி மற்றும் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மன் தவக்காட்சி மற்றும் சங்கர நாராயணர் காட்சி வழங்கும் வைபவம் வரும் நாட்களில் நடைபெற உள்ளது. விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலைகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு ஆன்மிக மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த திருவிழா, தென் தமிழகத்தின் முக்கிய மத விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சப்பர புறப்பாடு, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கான அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் திருவிழா கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com