Maharashtra Election | மகாராஷ்டிராவில் ரூ.3 லட்சம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Maharashtra Election | மகாராஷ்டிராவில் ரூ.3 லட்சம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Published on: November 6, 2024 at 11:24 pm
Maharashtra Election | மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி புதன்கிழமை (நவ.6, 2024) தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதன்படி, மாநிலத்தில் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ 3,000 மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகளில் இலவச பயணம் என்று வாக்குறுதி அளித்தது.
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் எம்.வி.ஏ வெற்றி பெற்ற பிறகு க்ரிஷி சம்ருத்தி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் சரத் பவார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஒவ்வொரு வேலையற்ற இளைஞருக்கும் MVA அரசாங்கம் மாதம் ரூ 4,000 வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே கூறினார்.
தொடர்ந்து, கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சமையல் எண்ணெய், சர்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய ஐந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நிலையானதாக இருப்பதை எம்விஏ உறுதி செய்யும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதையும் படிங்க மைசூரு நில ஒதுக்கீடு; சித்த ராமையாவுக்கு நோட்டீஸ்: நவ.6 ஆஜராக உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com