Bengaluru | இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்ளூருவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
Bengaluru | இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்ளூருவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
Published on: October 30, 2024 at 11:22 pm
Bengaluru | இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ராணி கமிலாவும் பெங்களூருவுக்கு தனிப்பட்ட பயணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் பெங்களூரு சமேதனஹள்ளியில் உள்ள ‘சவுக்யா’ என்ற சர்வதேச ஹோலிஸ்டிக் மையத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டனர்.
காலை நேரங்களில் யோகா பயிற்சி, சிகிச்சையின் ஒரு பகுதியாக சிறப்பான உணவு முறையை அவர்கள் கடைப்பிடித்தனர். மேலும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டதோடு, தனது மனைவியுடன் நடைபயணம், இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் மேற்கொண்டார்.
3 நாட்கள் தங்கியிருந்த சார்லஸ்-கமிலா தம்பதி இன்று காலை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் சார்லஸ் தனது 71-வது பிறந்தநாளை ‘சவுக்யா’ மையத்தில் கொண்டாடினார். இந்த மையத்தின் தலைவரான டாக்டர் ஈசாக் மதாய், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க வயநாடு மறு சீரமைப்பு பணிகள்; நிதி வழங்காத மோடி அரசு: பிரியங்கா பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com