Malappuram Elephant viral video | கேரள மாநிலம் மலபுரம் மாவட்டத்தில் உள்ள பி.பி. அங்காடி மசூதியில் நடந்த விழாவில் யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
Malappuram Elephant viral video | கேரள மாநிலம் மலபுரம் மாவட்டத்தில் உள்ள பி.பி. அங்காடி மசூதியில் நடந்த விழாவில் யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
Published on: January 8, 2025 at 10:03 pm
Updated on: January 11, 2025 at 9:27 am
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் புதியங்காடி பள்ளி வாசல் நேர்ச்சை விழா நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மிரண்ட யானை அருகில் நின்ற ஒருவரை தூக்கி வீசியது. இதில் கேரளாவை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
திரூரில் நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் 24 பேர் காயமடைந்தனர். புங்கடி திருவிழாவில் ஐந்து யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அப்போது பக்கத்து ஸ்ரீகுட்டன் என்று பெயரிடப்பட்ட யானை, திடீரென மிரண்டு கூட்டத்திற்குள் புகுந்தது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பாகனும் அப்பகுதியினரும் போராடினர். மேலும், கூட்டத்தில் ஒருவரை தூக்கி, வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com