Jharkhand Assembly Elections 2024 | ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உடன் இணைந்து போட்டியிடாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூற்றுப்படி, கூட்டணியில் போட்டியிட அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், “ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி இடதுசாரி கட்சிகளுக்கு எந்த இடத்தையும் கேட்டாலும் கொடுக்கவில்லை” என்றும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
ஜார்க்கண்ட் கூட்டணியில் ஜே.எம்.எம். 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி 6 தொகுதிகளிலும் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய இடதுசாரி தலைவர் ஒருவர், “காங்கிரஸ் தங்களுக்கு போட்டியிட ஓர் இடம் தருவதாக வாக்குறுதி அளித்தது” என்றார்.
மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதன்கிழமை 9 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தது. சிபிஐ(எம்) வேட்பாளர்கள் தமர், பஹரகோரா, மந்தர், ஜமா, பாகூர், ஜம்தாரா, மகேஸ்பூர், சிசாய் மற்றும் சத்ரா உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், தமர், சிசாய், மகேஸ்பூர், ஜமா மற்றும் மந்தர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் (எஸ்டி) ஒரு இடமும், சத்ரா பட்டியல் சாதியினருக்கும் (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமர், சிசாய், மந்தர், பஹரகோரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்: சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டி!
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது….
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்….
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது….
ஜார்கண்டில் JMM, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது….
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்