Uttar Pradesh bypoll | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Uttar Pradesh bypoll | உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Published on: October 24, 2024 at 5:32 pm
Updated on: October 24, 2024 at 5:36 pm
Uttar Pradesh bypoll | உத்தரப் பிரதேசத்தில் மீராபூர், குந்தர்கி, காசியாபாத், கெய்ர், கர்ஹால், புல்பூர், கதேஹரி உள்ளிட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உத்தரப் பிரதேசத்தில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (அக்.24, 2024) அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே பிஎஸ்பி பட்டியல் வந்துள்ளது.
வேட்பாளர் பட்டியல்
அமித் வர்மாவுக்கு கட்டேஹாரி (அம்பேத்கர் நகர்), ஜிதேந்திர குமார் சிங் புல்பூரிலிருந்து (பிரயாக்ராஜ்), ஷாநசார் மீராபூரில் (முசாபர்நகர்), வீரேந்திர குமார் சுக்லாவுக்கு சிசாமாவிலிருந்து (கான்பூர்) கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது.
டாக்டர் அவினாஷ் குமார் ஷக்யா கர்ஹால் (மெயின்புரி), ரஃபத்துல்லா குந்தர்கி (மொராதாபாத்), பர்மானந்த் கார்க் காஜியாபாத் மற்றும் தீபக் திவாரி மஜஹவான் (மிர்சாபூர்) தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், முடிவுகள் நவம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
2022 சட்டமன்றத் தேர்தலில், சிசாமாவ், கதேஹரி, கர்ஹால், மில்கிபூர் மற்றும் குந்தர்கி ஆகிய இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது, அதே நேரத்தில் பிஜேபி புல்பூர், காஜியாபாத் மற்றும் கைர் ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க மராட்டியத்தில் 170 தொகுதிகள்.. அடுத்து இவர் ஆட்சிதான்: ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு கருத்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com