Jagan Mohan | ஆந்திராவின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

February 17, 2025
Jagan Mohan | ஆந்திராவின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on: September 27, 2024 at 5:28 pm
Jagan Mohan | ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது திருப்பதி பயணத்தை இன்று ரத்து செய்தார். இது தொடர்பாக, இன்று (செப்.27, 2024) செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி கோயிலுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “லட்டுகள் குறித்து அவர் (சந்திரபாபு நாயுடு) கூறிய அனைத்து அறிக்கைகளும் ஒன்றன் பின் ஒன்றாக பொய் என்று நிரூபணமாகி வருகிறது.
அவர் தவறு செய்து கோயிலின் புனிதத்தை சீர்குலைத்துள்ளார். திருமலை கோவிலுக்கு பலமுறை சென்று வந்தேன், தற்போது மீண்டும் தலைப்பை திசை திருப்ப பல்வேறு விசயங்களை பேசிவருகிறார்” என்றார்.
மேலும், “திருமலை லட்டு சிறப்பு, தூய்மையானது, அரசியல் உள்நோக்கத்துடன் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன” என்றார். தொடர்ந்து, “திருப்பதி லட்டு தொடர்பான அறிக்கையை வெளிப்படுத்துவதில் ஏன் தாமதம்” என்றும் ஜெகன் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, “முதலமைச்சர் நாற்காலியில் அமர்பவர் இப்படி பொய் சொல்லக்கூடாது. கோவில், ஆண்டவனின் புகழை கெடுக்கக் கூடாது. நெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடக்கிறது. கோவில் வாரியம் தகுதியான ஏலத்தில் நெய்யை தேர்ந்தெடுக்கிறது” என்றார்.
திருமலை பயணம் ரத்து
ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்ல இருந்தார். அவரது பயணத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் தனது பயணத்தை இன்று ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருப்பதி லட்டின் தரம் குறைவு; பண்டைய காலத்தில் என்ன தண்டனை? கல்வெட்டு தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com